"போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்" - ராஜேந்திர பாலாஜி

0 4012

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உச்சநீதிமன்றம் கூறிய நிபந்தனைப்படி, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், விருதுநகர் திருத்தங்கலில் தான் தங்கியிருப்பதாகவும், போலீசார் தனக்கு சம்மன் அனுப்பினால், அதன்படி எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தயார், என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments