குடியரசு நாள் கொண்டாட்டங்கள் இனி ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் எனத் தகவல்.!

0 2620

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளையும் உள்ளடக்கும் வகையில் குடியரசு நாள் கொண்டாட்டங்கள் இனி ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

1950 ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அதற்கான கொண்டாட்டங்கள் ஜனவரி 24ஆம் நாளே தொடங்கி நடைபெறும். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125ஆவது பிறந்த நாளையொட்டி அவரைச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் குடியரசு நாள் கொண்டாட்டங்கள் ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments