ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிப்பு இல்லை என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது - சுகாதாரத்துறைச் செயலாளர்

0 7939

ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிப்பு இல்லை என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் அடுத்த 2 வாரங்களுக்கு மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காசிமேடு போன்ற பகுதிகளில் மீன்கள் வாங்க மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நாளில் கட்டாயம் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பது போன்றவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments