தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

0 7578

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

17,18ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும். 19-ந் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments