பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்த 2 வீரர்கள் நீக்கம்

0 4998

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் இரண்டு மாடுபிடி வீரர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

17 காளைகளை அடக்கி, முதலிடத்தில் இருந்த ராமச்சந்திரன் என்ற இளைஞர், அதே ஊரைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் பனியனை போட்டுக் கொண்டு, மாடு பிடித்தது தெரியவந்தது.

அதேபோன்று, 6காளைகளை அடக்கி, மூன்றாவது இடத்தில் இருந்த பெத்தாம்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர், அதே ஊரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருக்கு பதிலாக மாடு பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆவணங்கள் சரிபார்ப்பின் போது இருவரும் ஆள் மாறாட்டம் செய்து, மற்றவர்களுக்காக போட்டியில் களமிறங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments