பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் உடல்நலக் குறைவால் 5 பேர் உயிரிழப்பு

0 2426

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் 5 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் 2016 ஏப்ரல் முதல் முழு மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கள்ளச்சாராய விற்பனை எல்லைப் பகுதிகளில் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் நாலந்தா மாவட்டத்தில் மான்பூர் தானா என்னுமிடத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments