தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்கிற்கு சிலை அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3192

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில்  சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

பென்னிகுயிக் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல இடையூறுகளுகு மத்தியிலும் தனது சொந்த பணத்தை செலவு செய்து முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை மேலும் பெருமைபடுத்தும் விதமாக, அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முல்லை பெரியாறு அணை மூலம் சுமார் 2லட்சத்து 19ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments