திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து… திருவள்ளுவர் சிலையின் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து

0 2803

திருவள்ளுவர் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழில் வாழ்த்து கூறியுள்ள பிரதமர் மோடி, திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்கதோடு, நடைமுறைக்கும் ஏற்றவை எனவும், பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அத்தோடு தாம் கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலையின் காணொளியையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments