30 நாட்களில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா தகவல்

0 3274

உக்ரைன் நாட்டை அடுத்த 30 நாட்களில் படையெடுப்பு மூலம் கைப்பற்ற ரஷ்யா முயற்சிப்பதாகவும் அதனை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சைபர் நடவடிக்கைகளை அமெரிக்க உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .இருநாடுகளின் தலைவர்களான ஜோ பைடனும் அதிபர் புதினும் உக்ரைன் படையெடுப்பு தொடர்பான பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனின் இணையதளங்களை ரஷ்யாவின் சைபர் பிரிவு முடக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பல இணையதளங்களை செயலிழந்தன. அவை மறையும் முன்பு மோசமான நிலவரத்துக்கு தயாராக இருங்கள் என்று குறுஞ்செய்தி மூலம் போர் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் புகார் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments