கொரோனா கால விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் - பிரதமர் மோடி

பொதுமக்கள் கொரோனா காலத்தின் விதிமுறைகளைத் தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக் கொள்ளுமாறும் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்கவும் உடல் நலத்தைப் பேண சூரிய நமஸ்காரம் செய்யும் படியும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய பேரிடர் காலம் உடல் நலனை பாதுகாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வளர்த்துக் கொள்ளவும் நம்மை கட்டாயப்படுத்தி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
Comments