இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப்பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!

0 4290

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப்பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 7 அலகுகளாக பதிவாகிய இந்த நிலநடுக்கம்,  பான்டென் மாகாணத்திலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

தலைநகர் ஜகார்த்தாவில் கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில், மேற்கு ஜாவா மாகாணம் மற்றும் சுமத்ரா தீவுப்பகுதியில் உள்ள லாம்புங்கிலும் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments