நாகையில் வி.சி.க கட்சி பிரமுகரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தக் கோரியும் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.!

0 2975

நாகை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தக் கோரியும் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தனது வீட்டு வாசலில் எரிந்த நிலையில் உடல் கருகி சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாகை - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments