கொரோனா அறிகுறிகள் உள்ளோர் தாமாக மருந்துகளை உட்கொள்ளக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பார்த்து தாமாக மருந்துகளை உட்கொள்ளாமல், மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும், அவர்கள் 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
Comments