இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் இங்கிலாந்து பிரதமராக வாய்ப்பு.!

0 3923

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டின் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரதமராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002 மே மாதம் கொரோனா கால முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், போரிஸ் ஜாண்சன் தடையை மீறி மதுவிருந்தில் பங்கேற்றது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை முதலில் மறுத்த அவர், தற்போது விருந்தில் பங்கேற்றதை ஒப்புக்கொண்டு நாடாளுமன்றத்தில் மன்னிப்பும் கோரினார்.

அவரது கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளதால், நெருக்கடி காரணமாக போரிஸ் ஜாண்சன் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் ரிஷி சுனாக்கை பிரதமராக்க கனசர்வேட்டிவ் கட்சி எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments