உக்ரைன் அரசின் இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கம்.!

0 2591

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டமான சூழல் நீடித்து வந்த நிலையில், தற்போது உக்ரைன் அரசின் இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன. உக்ரைனை விரைவில் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த இணையத்தளங்களை முடக்கிய ஹேக்கர்கள், உக்ரைன் மக்களின் தனிநபர் விவரங்களை பொதுவெளியில் பதிவேற்றிவிட்டதாகவும், வரும் நாட்களில் மோசமான எதிர்வினைகளை சந்திக்கத் தயாராகுமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த காலங்களில் இதே போல் பல சைபர் தாக்குதல்களை ரஷ்யா நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments