தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

0 6646

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 15,16ஆகிய தேதிகளில் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17,18ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments