ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்கு பின் தாலிபான் அரசு முதல் பட்ஜெட் தாக்கல்

0 3671

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்கு பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டிற்கு தாலிபான் அரசு அனுமதி அளித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீத வெளிநாட்டு முதலீடுகளுடன் கூடிய பட்ஜெட்டை தாலிபான் அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளின் உதவியின்றி பட்ஜெட்டை தயாரித்துள்ளதாக தாலிபான் நிதித் துறை தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு ஏறத்தாழ 5 ஆயிரத்து 400 கோடி ஆப்கானி பணம் பட்ஜெட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்து அனுப்பப்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட அனைதது அரசு ஊழியர்களுக்கும் சம்பள பாக்கியை செலுத்துவது, உள்நாட்டு உட்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments