ஒமைக்ரானை கட்டுப்படுத்த 100 கோடி இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டம் - அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த 100 கோடி இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்த பைடன் தரமான முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
நாளொன்றுக்கும் ஒரு கோடியே 50 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக 50 கோடிக்கும் அதிகமான இலவச பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments