உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்

0 5923

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர்.

சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தரம் சிங் சைனி, கூட்டணி கட்சியான அப்னாதள்  எம்.எல்.ஏ. சவுத்ரி அமர் சிங் உள்ளிட்டோர் பதவி விலகினார்.

யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனங்களை வைத்த தரம் சிங் சைனி, பா.ஜ.க.வில் இருந்து விலகுவது குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை உறுதிபடுத்தும் விதமாக தரம் சிங் சைனி உள்ளிட்டோருடன் தனித் தனியாக எடுத்துக் கொண்ட படத்தை அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments