கோவையில் வீட்டின் முன் சாவியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்.!

0 18784

கோவையில், வீட்டின் முன்பு சாவியுடன் நிறுத்திச் சென்ற இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் ஓட்டிச் சென்றதைக் கண்ட உரிமையாளர், பிடிக்க பின்னாலேயே துரத்திச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

பி.என் புதூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வீட்டின் வாசலில் இரு சக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து பொருள் ஒன்றை எடுப்பதற்காக உள்ளே சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர், ஸ்கூட்டரை திருடிச் சென்றுள்ளார்.

உடனடியாக பாண்டியன் கூச்சலிடவே, அவ்வழியாக பைக்கில் வந்த நபர் ஸ்கூட்டரை துரத்திச் செல்ல, பாண்டியன் பின்னாலேயே தலைதெறிக்க ஓடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments