தெருநாய்களை சுட பயன்படுத்தப்பட்ட நாட்டுத்துப்பாக்கியின் குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

0 4502

தெருநாய்களை சுட பயன்படுத்தப்பட்ட நாட்டுத்துப்பாக்கியின் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நபரின் உதவியுடன் சுட பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

இதனை அடுத்து அவர் கண்மூடித்தனமாக சுட்டதில் நாட்டுத்துப்பாக்கியின் குண்டு பாய்ந்து விஜயா என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விஜயாவின் மகன் பாபு வழக்கு தொடர்ந்தார்.

இதன் விசாரணையில், பஞ்சாயத்து பொறுப்புகளில் இருந்தவர்கள் 5 லட்ச ரூபாயும், தமிழக அரசு 5 லட்ச ரூபாயும் என 10 லட்ச ரூபாய் இழப்பீடாக எட்டு வாரங்களுக்குள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments