”கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை” - மாவட்ட ஆட்சியர்

கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை எனவும் மக்கள் ஊடகங்கள் வாயிலாக போட்டியை நேரலையில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போட்டியில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.
Comments