தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

0 8738

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 20 ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மேலும் 8 ஆயிரத்து 218 பேருக்கும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 30 பேருக்கும், கோவையில் ஆயிரத்து 162 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 6 ஆயிரத்து 235 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 610 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments