இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3657

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு வரும் 27ஆம் தேதி வரை சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ட்விட்டர் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments