கர்நாடகாவில் செல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்த காவலர்.!

0 4486

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் புலம்பெயர் தொழிலாளியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை விரட்டி பிடித்து காவலர் கைது செய்த காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகிறது.

நேரு மைதானம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரிடம் இருந்து இரண்டு பேர் சேர்ந்து செல்போனை பறித்துச் சென்றிருக்கின்றனர். திருடர்களை விரட்டிக் கொண்டு தொழிலாளி சென்ற நிலையில், வழியில் காரில் சென்ற வருண் என்ற காவலர், இறங்கி ஓடி தொழிலாளியை பிடித்து விசாரித்திருக்கிறார்.

அப்போது, செல்போனை மர்ம நபர்கள் பிடுங்கி கொண்டு ஓடுவதாக அவர் தெரிவித்ததை அடுத்து, பின்னாடியே மூச்சிறைக்க விரட்டிச் சென்ற காவலர், தடைகளை தாண்டி ஓடி ஒருவனை மடக்கி பிடித்தார்.

பட்டப்பகலில் போக்குவரத்து மிகுந்த சாலையில் திருடனை விரட்டிச் சென்று மடக்கி பிடித்த காவலருக்கு 10ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி, மங்களூர் காவல் ஆணையர் பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments