இந்தியா - பிரிட்டன், தடையற்ற வணிக உடன்பாடு குறித்துப் பேச்சு ஓராண்டில் முடித்துக்கொள்ள ஒப்புதல் - அமைச்சர் பியூஷ் கோயல்

0 2835

இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையற்ற வணிக உடன்பாடு குறித்த பேச்சுக்களை ஓராண்டுக் காலத்துக்குள் முடித்துக்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரிட்டன் வணிகத்துறை அமைச்சர் ஆனி மேரி டிரவல்யன், பியூஸ்கோயல் ஆகியோர் தடையற்ற வணிக உடன்பாடு குறித்த பேச்சுக்களைத் தொடங்கினர்.

2030ஆம் ஆண்டுக்குள் இருநாடுகளிடையான வணிகத்தின் அளவை இருமடங்காக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஆனி மேரி டிரவல்யன் தெரிவித்தார். இடைக்கால உடன்பாடு மற்றும் இறுதி உடன்பாட்டை விரைவில் முடிப்பதற்கு பிரிட்டனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகப் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments