புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் உயர்வு

0 3783

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டணத்தை உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், gfx in ஒரு மாதத்திற்கு 0-100 யூனிட் வரை பயன்படுத்தினால், ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் 56 காசுகளாக இருந்த கட்டணம், ஒரு ரூபாய் 90 காசுகளாகவும், 101-200 யூனிட் வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் 60 காசுகளாக இருந்த கட்டணம், இரண்டு ரூபாய் 75 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிறு விவசாயிகளுக்கு நிரந்த கட்டணம் 11 ரூபாயிலிருந்து 20 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் 50 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குடிசைகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. gfx out

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments