கோவையில் போலி ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் பறிமுதல்

0 14168

கோவையில் உள்ள நகைக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த, சுமார் 11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலி ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த நகைகளை பரிசோதனை செய்ததில் போலியான ஹால்மார்க் முத்திரை இருந்தது உறுதியானதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments