கோவையில் வாகன தணிக்கையின் போது லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் வாகன தணிக்கையின் போது லஞ்சம் வாங்கியதாக இரண்டு காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி மீன்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மேற்கு காவல் நிலைய காவலர்கள் மதிசேகரன், சரவணன் ஆகியோர் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளிடமும், மாடு ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் அடிப்படையில் காவலர்கள் மதிசேகரன், சரவணன் ஆகியோரை 15 நாட்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
Comments