புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு முதற்கட்டமாக 20 ரோந்து வாகனங்கள் - முதலமைச்சர்

0 3073

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்ட நவீன ரோந்து வாகனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் ஆணையரக அலுவலகங்களுக்கு ரோந்து பணிக்கு தேவையான கூடுதல் உபகரணங்களுடன் 106 சிவப்பு நிற மகேந்திரா பொலிரோ வாகனங்கள் 9கோடியே 76லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

வாகனத்தை தொலைவில் இருந்து அடையாளம் தெரிந்து கொள்ள மூன்று வண்ண விளக்குகள், ஜி.பி.எஸ். கருவி ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு 10 வாகனமும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு 10 வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments