தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடக்கம்.. சீறி வரும் காளைகளை பிடிக்க வீரர்கள் மும்முரம்..

0 2688
பொங்கல் பண்டிகையை ஒட்டி, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் தீரத்துடன் எதிர்கொண்டனர்.

சில காளைகள், காளையர்களின் கையிலேயே சிக்காமல் நழுவி ஓடின. சில காளைகள் துள்ளி குதித்து மாடுபிடி வீரர்களுக்கு தண்ணி காட்டி திணறடித்தன.

இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியை மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments