விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து.. தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது

0 1761

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து சம்பவத்தில், தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

களத்தூர் கிராமத்தில் உள்ள RKVM பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 1ஆம் தேதி, வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதில் 7க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாயின.

அதில், 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வந்த நத்தம்பட்டி காவல்துறையினர், பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments