2 நாட்களுக்கு முன் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சருக்கு பிடி வாரண்ட்..

0 2950
உத்திரபிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மதவெறியை தூண்டுவது மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து சர்ச்சை கருத்துகளை சுவாமி பிரசாத் மவுரியா வெளியிட்ட வழக்கில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து சுல்தான்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. 2 நாட்களுக்கு முன் பா.ஜ.கவில் இருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியா, சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments