பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதி துப்பாக்கிச் சூடு.. காவலர் வீரமரணம்

0 2304
காஷ்மீரில் தீவிரவாதியுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதியுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவனைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் முயற்சி மேற்கொண்டனர். அப்போது அந்த தீவிரவாதி தான் வைத்திருத்த துப்பாக்கியால் சுட்டதில் ரோகித் சிப் என்ற காவலர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 3 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் இருவரும் படுகாயமடைந்தனர்.

காவலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments