அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவ திட்டங்களுக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு - பிரதமர் மோடி

0 1763
தமிழகத்தின் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தின் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில்  மத்திய அரசு 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பங்கேற்ற இந் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைத்து உரையாற்றினார்.

உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்ததே சாதனையாக இருந்தது என்ற அவர், தமது சாதனையை தாமே முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.

தமிழக அரசின் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார். தேசிய புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments