சோமாலியா தலைநகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி..!

0 1983

சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமர்வேய்ன் மாவட்டத்தில் விமானநிலையம் செல்லும் சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அருகில் இருந்த மசூதியின் சுவர்களிலும் அதிர்வுகள் எதிரொலித்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மசூதியில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அப்பகுதியில் இருந்த பழைய வீடுகள் இடிந்து விழுந்திருந்ததுடன், இறந்தவர்களின் உடல்பாகங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்ததாகவும், அவர் கூறினார். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments