பொங்கல் பரிசு தொகுப்பில் புளியில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டிய அதிமுக நிர்வாகியின் மகன் தற்கொலை..!

0 3878

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டிய அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில், தந்தை மீது வழக்குப்பதிவு செய்ததற்காக, அவரது மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15ஆவது வட்ட அதிமுக துணை செயலாளரான நந்தன் என்பவர், பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றிருந்த புளியில் பல்லி இருந்ததாக கூறியிருந்தார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக நந்தன் மீது திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், நந்தனின் மகன் குப்புசாமி, நேற்று மாலை தனக்கு தானே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துக் கொண்டார்.

தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த குப்புசாமி, தந்தை மீது வழக்குப்பதிவு செய்த வருத்தத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments