விலை விசாரிப்பதை போல் பேச்சுக்கொடுத்து செல்ஃபோன் திருடிச்சென்ற மர்மநபர்

0 2629

கும்பகோணம் அருகே வாடிக்கையாளர் போல் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், செல்போன் விலையை விசாரிப்பது போல் பேச்சுக்கொடுத்து, பெண் ஊழியர்களின் திசை திருப்பி செல்போனை திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுவாமிமலை பெரிய கடைத்தெருவில் இயங்கி வரும் செல்ஃபோன் விற்பனை கடையில் இருந்த பெண் ஊழியர்களில் ஒருவர் கீழே திரும்பி அமர்ந்தபடி, செல்ஃபோனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது, இன்னொரு ஊழியர் கடைக்கு வெளியே சென்றார்.

இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர் ரேக்கில் இருந்த செல்ஃபோனை லாவகமாக எடுத்து தனது பாக்கெட்டில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றான். இது தொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments