நகை வாங்குவது போல நடித்து தங்க மோதிரங்கள் திருட்டு..!

0 3842

கோவையில் நகைக்கடை ஒன்றில், நகை வாங்குவது போல நடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ஊழியரை திசை திருப்பி தங்க மோதிரங்களை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காந்திபுரம் பகுதியில் உள்ள அந்த நகைக்கடையில், குழந்தைகளுக்கு நகை வாங்குவது போல வந்த இரண்டு பேர், மோதிரங்களின் டிசைன்களை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர், கடை ஊழியர் 14 தங்க மோதிரங்கள் காணாமல் போனதாக மேலாளரிடம் தெரிவித்ததையடுத்து கடையின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரு நபர் மோதிரங்களை பார்த்துக் கொண்டிருந்த போது மற்றொரு நபர் ஊழியரிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பி, மோதிரங்களை திருடி கைக்குட்டைக்குள் மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கடையின் மேலாளர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments