மூதாட்டிகளிடம் லாவகமாக பேசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட தின்பண்டங்களை கொடுத்து, நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதல் ஜோடி கைது

0 3351

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூதாட்டிகளை குறிவைத்து நூதன முறையில் நகை பறித்து வந்த கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

வடமதுரை, குஜிலியம்பாறை போன்ற பகுதிகளில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகளிடம் லாவகமாக பேசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட தின்பண்டங்களை கொடுத்து மயக்கமடையச் செய்தபின், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடிச் செல்வதை இந்த ஜோடி வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 10-க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டிய இந்த ஜோடியை ஒரு மாதமாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனை எதிரே இந்த ஜோடி, மூதாட்டி ஒருவரிடம் பேசி அவரை பைக்கில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து, திருட்டில் ஈடுப்பட்ட கணேசன் மற்றும் சுமதியை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments