இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்

0 4090

இஸ்ரோவின் அடுத்த தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி எஸ். சோம்நாத் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக 2018 முதல் இருந்து வரும் சோம்நாத், ஜிஎஸ்எல்வி Mk 3 மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்களின் ஆரம்பகால உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ளார். கேரளாவில் பிறந்த இவர், கொல்லம்-இல் உள்ள டி.கே.எம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்-ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை படிப்பை முடித்து, பிறகு பெங்களூருவின் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்-ல் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முதுகலை படிப்பை முடித்துள்ளார்.

அதன்பின் 1985-ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இணைந்தார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் கே.சிவனின் பதவி காலம் வரும் 14ஆம் தேதியோடு முடிவடைகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments