அமெரிக்காவில் தேவாலயம் அருகே விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகாப்டர்... ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயம்

0 2634

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று தேவாலயம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

நோய்வாய்ப்பட்ட குழந்தையை, செவிலியர் ஒருவர் மருத்துவ ஹெலிக்காப்டரில் பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த மாகாணத்தின் மேற்குப்பகுதியில் குடியிருப்புகளிடையே அமைந்துள்ள தேவாலயம் அருகே சென்ற போது, ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.

இதில் உள்ளே இருந்த குழந்தை, செவிலியர், விமானி உட்பட 4 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments