பெண்ணிடம் அத்துமீறி நடந்துக் கொண்டதாக இளைஞர் ஒருவர் பொது இடத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல்

0 3372

கர்நாடக மாநிலம் ஹாசனில் பொது இடத்தில் இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக இளைஞர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் மேகராஜ் என்ற அந்த இளைஞர், ஹாசன் நகரில் உள்ள மகாராஜா பூங்காவிற்கு குடிபோதையில் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் சத்தம் போட்டதாக சொல்லப்படும் நிலையில், அந்த பகுதியில் இருந்த கர்நாடகா பிரஜா சக்தி அமைப்பின் மாவட்டத் தலைவர் பிரவீன் கவுடா என்பவரும் மற்றும் சிலரும் மேகராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை தாக்கிய பிரவீன் கவுடா உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments