போலீசாரால் தேடப்பட்டு வந்த "படப்பை"குணாவின் கூட்டாளி "போந்தூர்"சேட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... விரைவில் கைது செய்ய போலீசார் திட்டம்

0 2473

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளி போந்தூர் சேட்டுவை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவன் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

கொலை, ஆட்கடத்தல் உட்பட 42க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய படப்பை குணாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவனுடைய கூட்டாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டும் வருகின்றனர். அந்த வரிசையில் படப்பை குணாவின் கூட்டாளியான போந்தூர் சேட்டு என்பவனையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவது தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்களுடன் ஆலோசித்து, போந்தூர் சேட்டு குணமடைந்ததும் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments