கோவா, உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து விலகும் பாஜக எம்எல்ஏக்கள்..!

கோவா சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 14-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகியுள்ளார். பிரவீன் ஜன்டே என்னும் அவர், MGP என அழைக்கப்படும் மகர்ஷ்ட்ராவாடி கோமன்டக் என்னும் பிராந்திய கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் கோவா சட்டமன்றத்தில் தற்போது பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 27-ல் இருந்து 23 ஆக குறைந்துள்ளது. இதுபோல் உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா மற்றும் 4 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர்.
Comments