சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சாமிவேலுக்குத் தூக்குத் தண்டனை உறுதி - உயர்நீதிமன்ற கிளை

0 3037

சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியைச் சேர்ந்த  சாமிவேல் என்கிற ராஜா கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலையும் செய்தான்.

இது தொடர்பான வழக்கில்  புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை உறுதி செய்யக் கோரி போலீசார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை செய்தே தூக்கு தண்டனை வழங்கி உள்ளது என்றும் கூறி தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments