விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 5355
கர்நாடக மாநிலம் மங்களூரில் சாலையில் யூ-டர்ன் அடித்த பேருந்தின் மீது மோதுவதிலிருந்து நூலிழையில் தப்பித்த ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் சாலையில் யூ-டர்ன் அடித்த பேருந்தின் மீது மோதுவதிலிருந்து நூலிழையில் தப்பித்த ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

Elyarpadavu  என்ற இடம் அருகே நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றின் மூன்று சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

வளைவான சாலையில் அதிவேகத்தில் ஸ்கூட்டியில் வந்த அந்த இளைஞர், பேருந்துக்கும் சுற்றுசுவருக்கும் இடையில் நுழைந்து, பிறகு அருகே உள்ள பெட்டிக்கடை ஒன்றுக்கும் மரத்துக்கும் இடியே நிழைந்து உயிர் தப்பினார்.

இதில் அவரது ஹெல்மெட் கீழே விழுந்த நிலையில், ஸ்கூட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி சென்றார்.மனதை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments