டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அறிவிக்கக் கோரிய மனுதாரருக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..

0 3741
அரசு விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், விளம்பரத்துக்காகப் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ராம்குமார் ஆதித்தன் தொடுத்த வழக்கில், டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களில் அனைத்து விழா நாட்களிலும் மது விற்பனை கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்காலங்களில் வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடவே விடுமுறை என்றும், தமிழகத்தில் விழா நாட்களில் மது அருந்தி நிறைய விபத்துகளும் உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், பார் கவுன்சில் பதிவை ரத்து செய்ய உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments