தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 16486
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

13-ந் தேதி முதல் நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மழையும், பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

தென் கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 50கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments