பொங்கல் பண்டிகையை ஒட்டி, திமுகவினருக்கு முதலமைச்சர் வாழ்த்து..

0 2374
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு எனக் கூறியுள்ள முதலமைச்சர், கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக பரவும் நேரத்தில், மக்கள் வீடுகளிலேயே இருந்து பாதுகாப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ள அவர், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடவும், பொங்கல் பண்டிகைக்கு தன்னை நேரில் சந்திக்க வருவதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments